‘வாடிவாசல் பத்தி நெறைய செய்தி வருது… ஆனா உண்மை இதுதான்’… வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

vinoth
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:44 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தில் . இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

வாடிவாசல் எப்போது தொடங்கும் என்பதுதான் சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் “வாடிவாசல் படம் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருவதால், அந்த படமே நடக்காது என செய்திகள் வெளியாகின. ஆனால் வாடிவாசல் கூடிய விரைவிலேயே தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்