லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

vinoth

வெள்ளி, 10 ஜனவரி 2025 (15:38 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக லப்பர் பந்து அமைந்துள்ளது. இந்த படம் வெறும் ஐந்தரை கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்த படம் பற்றி தற்போது பாராட்டி பேசியுள்ளார். அதில் “கடந்த ஆண்டு வந்த படங்களில் எனக்கு லப்பர் பந்து மிகவும் பிடித்தது. அந்த படத்தில் தினேஷின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் நடிப்பது போலவே தெரியவில்லை. ஆனால் சிறப்பாக நடித்திருந்தார். அவரைத் தூக்கி வைத்து கொண்டாடவேண்டும். அவரோடு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்