எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனம்… நானியின் மாஸ் அவதார் – எப்படி இருக்கு சரிபோதா சனிவாரம் டிரைலர்!

vinoth

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (07:33 IST)
நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'சரிபோதா சனிவாரம்' திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

டிரைலரில் எஸ் ஜே சூர்யா மாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கும் சாதாரண மனிதராக இருக்கும் நானிக்கும் இடையே எதிர்பாராமல் நடக்கும் மோதலின் விளைவாக நடக்கும் சம்பவங்கள்தான் படமாக இருக்குமென்பதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்