தமிழ் ராக்கர்ஸில் வெளியானது 'வடசென்னை'- அதிர்ச்சியில் படக்குழு

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (12:05 IST)
‘வட சென்னை’ படம் வெளியான உடனேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் வந்த அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. படம் வெளியான சில மணி நேரத்தில் பல ஆயிரம் பேர் டவுன்லோடு செய்திருப்பதால், படவசூல் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
 
 
‘வட சென்னை’ படத்தை ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் 3 ஆண்டு கால உழைப்பை வீணடித்திருப்பதாக படக்குழுவினர் வேதனை அடைந்துள்ளனர். தமிழ்ராக்கர்ஸ் என்ற  பூனைக்கு மணிகட்டுவது யார் என்றும் திரையுலகினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்