மரண மாஸ் - திரை பிரபலங்கள் பாராட்டும் வடசென்னை

புதன், 17 அக்டோபர் 2018 (11:53 IST)
வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து இன்று வெளியாகியுள்ள வடசென்னை படத்தை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

 
'வடசென்னை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 5 மணி முதல் காட்சிகள் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
முதலாவதாக பயங்கர வன்முறை காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் அதிகம் இருப்பதால் இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டாம் என்று படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். லும் 'காட் பாதர்', 'நாயகன்' படங்களுக்கு பின்னர் ஒரு கச்சிதமான கேங்க்ஸ்டார் படம் என்றும் ஆக்சன் படத்தை விரும்புபவர்கள் இந்த படத்தை மிஸ் செய்துவிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
 
தனுஷ் வழக்கம்போல் தனது நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் மீண்டும் ஒருமுறை தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி ஒரு மிரட்டலான படைப்பை கொடுத்துள்ளதாகவும் விட்டர் பயனாளிகள் கூறியுள்ளனர்.
 
ரசிகர்கள்  மட்டுமில்லாமல் இன்று அதிகாலை முதல் காட்சியை பார்த்த பல திரைப்பிரபலங்கள் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர்.

 
இப்படத்தை பார்த்த நடிகை ஆர்த்தி “மரண மாஸ்... ராவா, காம்பரமைஸ் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். கண்டிப்பாக பார்க்க வேண்டும். வித்தியாசமான அனுபவம். இடைவேளை  காட்சி சூப்பராக இருக்கிறது” என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 
அதேபோல், மூடர் கூடம் இயக்குனர் நவீன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ காசி தியேட்டரில் 5 மணி காட்சி... என்ன படம்.. வட சென்னை ஒரு காவியம். வடசென்னை ஒரு கிளாசிக். வெற்றிமாறனுக்கு சல்யூட் ” என பதிவு செய்துள்ளார்.

 
அதேபோல், படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சூப்பர். படத்தின் பின்னணி பிசை மிரட்டலாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்க தவறாதீர்கள் என இணையதளத்தில் திரைப்படங்களை விமர்சிக்கும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்