விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான சச்சின் திரைப்படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த படத்தை மீண்டும் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தை, பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்தார். இப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, நினைவில் நிலைக்கும் பாடல்களை வழங்கியுள்ளார். சச்சின் படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை.ஆனால் விஜய் மற்றும் வடிவேலுவின் காமெடிக் காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன.