ஹாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் சந்திப்பு- வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (22:00 IST)
ஹாலிவுட் சினிமாவில் இரண்டு லெஜண்டுகள் மற்றும் சூப்பர் ஸ்டார்களாக வலம் வரும் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன், அர்னால்ட் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக வாய்ப்பு கேட்டலைந்த போதும் எந்தக் கதவுகளும் திறக்கப்படாத நிலையில், தானே ஒரு திரைக்கதை எழுதி, அதில் ஹீரோவாக நடித்து இயக்கினார் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன். ராம்போ என்ற பெயரில் வெளியான அப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் அடித்தது.

அடுத்தடுத்து சில்வர் ஸ்டாலோன் மார்க்கெட் உயர்ந்து படங்களும் வெற்றி அடைந்தன.

இதற்கிடையே, படிஃபில்டிங்கில் ஆர்வம் காட்டி வந்த ஆர்னால்ட் மிஸ்டர் ஒலிம்பியா   உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வம் காட்டி படம் வென்றார். எனவே சினிமாவில் அர்னால்ட் அறிமுகமாகி சில்வர் ஸ்டாலோனுக்கு போட்டியாக இருந்தார்.

பின்னர், இருவரும் நண்பர்களாகி, எஸ்கேப், எக்ஸ்பேண்டபில்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக நடித்தனர்.

இந்த நிலையில், இருவரும் சமீபத்தில் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்