ஹேச்.வினோத்குமார் இயக்கத்தில்,நடிகர் அஜித் குமார் மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் அஜித்61 இப்படத்தின் ஷூட்டிங் புனேயில் நடைபெற்று வரும் நிலையில், அஜித்குமார், தனிப்பட்ட விஷயமாக ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால், தீபாவளிக்கு ரிலீஸாக இருந்த திரைப்படம் டிசம்பருக்கு தள்ளிபோயுள்ளது.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் பாரீஸ் சென்றுள்ளார். அங்கு விருந்து ஒன்றில் கலந்துகொண்ட அவரது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், குடும்பத்தினர் அனைவரும் ம்துக்கோப்பையுடன் உள்ளனர்.