TTF வாசன் ஹீரோவாக நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (08:00 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து இவரை சில முறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதனால் மேலும் சர்ச்சையில் அவர் சிக்கினாலும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே TTF வாசன் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல இப்போது அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை செல்அம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கையில் சூலத்தோடு பைக் ஓட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக வாசன் இருக்கும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்