பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப் பற்று ஆகியப் படங்களில் அவர் நடித்திருந்தார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் எல்லாப் படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் பெற்றன.
அவரது புகைப்படங்களில் மிகவும் இளைத்து ஆள் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். மேலும் அவரது பதிவுகள் எல்லாம் விரக்தி மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. அவர் நடித்த படங்களின் சம்பள பாக்கி, மற்றும் பட வாய்ப்புகள் இல்லாதது ஆகியவைதான் அவரின் இந்த மாற்றத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பலர் அவரின் பதிவுகளின் கீழ் லோகேஷ் கனகராஜை டேக் செய்து அவருக்கு உதவுமாறும் கேட்டு வருகின்றனர்.