மீண்டும் தொடங்கிய LIK பட ஷூட்டிங்… ரிலீஸ் தேதி LOCK!

vinoth

சனி, 12 ஏப்ரல் 2025 (10:43 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் LIK படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. எதிர்கால காதல் பேண்டசி படமாக இது உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. ஆனால் சில காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சண்டிகாரில் தொடங்கி நடந்தது. இந்த படத்துக்கு LIK (Love insurance company) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீமா” வெளியாகி கவனம் பெற்றது.

படத்தின் ஷூட்டிங் இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் மலேசியாவில் இந்த பட ஷூட் தொடங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பை முடித்து செப்டம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்