7 நாட்களில் ரூ.461 கோடி என்பது உண்மைதானா? சந்தேகம் கிளப்பும் திருப்பூர் சுப்பிரமணியன்..!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:33 IST)
விஜய் நடித்த லயோ திரைப்படம் 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு உண்மைதானா என்ற கேள்வியை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் எழுப்பி உள்ளார்.  

ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் 127 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் மட்டுமே வெளியான லியோ எப்படி முதல் நாளில் 146 கோடி வசூல் செய்திருக்கும் என்ற கேள்வி ஏற்கனவே எழுப்பப்பட்டது.

அதேபோல்  ஆயுத பூஜை விடுமுறை தினம்  மற்றும் சனி ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்கள் இருந்ததால் முதல் ஆறு நாட்களுக்கு லியோ திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது உண்மைதான்.

ஆனால் அதே நேரத்தில் ஏழாவது நாள் இந்த படத்திற்கு கூட்டம் இல்லை என்றும் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 7 நாட்களில் 461 ரூபாய் வசூல் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சந்தேகத்தை கிளப்பி உள்ளது என்றும் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்