இந்தியன் 2 படத்துக்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (07:30 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங்கை மேலும் 60 நாட்கள் நடத்த வேண்டும் என இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கமல்ஹாசன் 20 நாட்கள் நடிக்க வேண்டி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இரண்டு பாகங்களாக இந்தியன் 2 உருவாக உள்ளதால் இந்த படத்துக்காக இயக்குனர் ஷங்கருக்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக 2 பாகங்களுக்கும் சேர்த்து அவருக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்