ஆர்ட்டிகிள் 15 படத்தில் இணைந்த விஜய் சேதுபதி பட நடிகை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:08 IST)
தமிழில் ரீமேக் ஆகும் ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக்கில் கருப்பன் பட புகழ் தன்யா ரவிச்சந்திரன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த் ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் கருப்பன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தன்யா ரவிச்சந்திரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். கருப்பன் படத்துக்கு பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த தன்யாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என நம்பி வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்