அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்து சர்ச்சைக்குரியது என்று கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறனும் அவரது பேச்சுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் வெற்றிமாறன், திரையரங்கில் இருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ரசிகர்களுடன் 10 நிமிடம் படம் பார்த்தேன். படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அவர்கள் தான் சொல்ல வேண்டும்," என்று கூறினார்.
மேலும், அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது," என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.