அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில், கடைசி நேரத்தில் இந்த படத்தில் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் இந்த படத்தில் இணைந்துள்ளார்என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் ஜோடியாக திரிஷா நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் தொலைக்காட்சி பிரபலம் ரம்யா சுப்ரமணியன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அஜித்துடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், ரம்யா இணைந்துள்ளதை அடுத்து, அவருக்கு என்ன கேரக்டராக இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில நாட்களில் இந்த பாடல் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.