ஜம்மு காஷ்மீரில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு: வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (07:44 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தினமும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மே மாதம் மூன்றாம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கொரோனா வைரஸால் 26 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இன்று முதல் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மீறி தேவையில்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்