தென்னிந்தியாவில் 2000 திரைகளில் ரிலீஸ்.. வட இந்தியாவில் ரிலீஸாகாத தங்கலான் – பின்னணி என்ன?

vinoth
சனி, 10 ஆகஸ்ட் 2024 (09:37 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய படமாக தங்கலான் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்புள்ள நிலையில் அதிகளவிலான திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் “தென்னிந்தியாவில் மட்டும் தங்கலான் திரைப்படம் 2000 திரைகளில் ரிலீஸாகவுள்ளது. வெளிநாடுகளில் 1000 திரைகளில் ரிலீஸாகும். வட இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவில்லை. அங்கு சில பெரிய படங்கள் ரிலீஸாகின்றன. அதனால் 2 வாரம் கழித்துதான் அங்கு ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்