தாய்லாந்துக்கு பறக்கும் தளபதி 68 படக்குழு!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (13:49 IST)
லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் சில தினங்களுக்கு முன்னர் பூஜை வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்தது. படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

கடந்த வாரங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழு விரைவில் தாய்லாந்து செல்ல உள்ளதாகவும், அங்கு ஷூட்டிங்கை முடித்த பிறகு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வேறு சில நாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்