யாத்ரா 2 வில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (13:44 IST)
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மார்க்கெட்டில் இருந்தவர் நடிகர் ஜீவா. அவர் நடித்த கோ, நண்பன்,ஈ உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் அந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவர் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யவில்லை. இதனால் தோல்விப் படங்களாகக் கொடுத்து இப்போது தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் யாத்ரா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பயோபிக், ‘யாத்ரா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு அதில் மம்மூட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாத்ரா 2 ஆம் பாகத்திலும் மம்மூட்டி நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் மகேஷ் மஞ்சரேக்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்போது அவர் சம்மந்தமானக் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்