நான் ரெடிதான் வரவா? லியோ வெற்றிவிழா! – தயாராகும் சென்னை நேரு ஸ்டேடியம்?

சனி, 28 அக்டோபர் 2023 (17:34 IST)
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமாக வெற்றி விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் லியோ. அனிருத் இசையமைத்த இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா என பலர் நடித்திருந்தனர். வெளியான ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 450+ கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது லியோ.

ஆனால் லியோ படம் வெளியாகும் முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு பின்னர் பல்வேறு சூழல்களால் நடத்த முடியாமல் போனது. அது விஜய் ரசிகர்களுக்கு இன்றும் வருத்தத்திற்கு உரிய ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் ஆடியோ வெளியீட்டை நடத்த முடியாமல் போனாலும், லியோ படத்தின் வெற்றியை கொண்டாடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

விரைவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக வெற்றி விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்