டாப் ஸ்பீடில் எகிறிய டாப்ஸி திரைப்படம்:ரசிகர்கள் வரவேற்பு

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (10:27 IST)
பிரபல நடிகை டாப்ஸி நடிப்பில் வெளிவந்த கேம் ஓவர் திரைப்படம் இரண்டு நாட்களில் 32 லட்சம் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் என்ற திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கேம் ஓவர் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.14 லட்சம் வசூல் செய்தது என செய்தி வெளியானது.

ஆனால் தற்போது, வெளியான இரண்டு நாட்களில் இத்திரைப்படம் ரூ.32 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகிறது.

பிரபல நடிகை டாப்ஸி முதலில் கோலிவுட்டில் அறிமுகமானாலும், பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.

பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு  தமிழில் கேம் ஓவர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்