விடாமுயற்சி படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்த அஜித்!

vinoth

வியாழன், 26 டிசம்பர் 2024 (08:10 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸானது.

நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தற்போது படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை அஜித் நிறைவு செய்துள்ளார். இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்