2002ல் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் – சிம்ரன் ஜோடி நடித்து வெளியான படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. இலங்கை போரை மையமாக கொண்ட இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. பிறகு இருவரும் தனிதனியாக படங்களில் நடித்தனர். காலப்போக்கில் காணாமல் போன இருவருக்கும் கம்பேக்காக சில திரைப்படங்கள் கிடைத்தன. மாதவன் ‘இறுதிசுற்று’, ‘விக்ரம் வேதா’ போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா உலகில் நுழைந்திருக்கிறார். சிம்ரன் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மலையாள இயக்குனர் மாதவன் இயக்கத்தில் வெளியாகும் ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி ராஜன் அவர்களின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தில் மாதவன் விஞ்ஞானி நம்பி ராஜனாக நடிக்கிறார். சிம்ரன் அவரது மனைவியாக நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
2001ல் பாலசந்தரின் ‘பார்த்தாலே பரவசம்’, 2002ல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, அதற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இருவரும் மூன்றாவதாக இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.