பா.ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு சான்று உள்ளதா ? சீமான் கேள்வி

சனி, 15 ஜூன் 2019 (21:07 IST)
பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது திரைத்துறையினர் மத்தியிலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் : ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு சரித்திரச் சான்றுகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி , காலா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறிவருகிறார். ஆனால்  சில நேரங்களில் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது.
 
கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி கடுமையான விமர்சித்தார்.
 
அதில் முக்கியமாக  மன்னர் ராஜராஜனை அவன்,இவன் என ஒருமையில் விமர்சித்தார். ஒருகட்டத்தில் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தலித்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்று கூறினார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
 
பா. ரஞ்சித்தின் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்துஅமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.
 
இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலிஸார் சமீபத்தில்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக 153,153A ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
மேலும் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாக பா,.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.
 
இயக்குநர் பா. ரஞ்சித் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் சினிமாதுறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் : ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு சரித்திரச் சான்றுகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்
 
மேலும் , பல்வேறு நாடுகளை வென்று வல்லரவை நிறுவிய மன்னர் சொந்த நாட்டு குடிமக்களின் நிலத்தை எடுத்துக்கொண்டார் என்பதற்கு என்ன சான்று உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்