நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது…!

vinoth

வியாழன், 26 டிசம்பர் 2024 (08:17 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயம் ஆனார். அதன் பின்னர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.

அவரது சிறுநீர்ப் பை அகற்றப்பட்டு அவரது குடலிலிருந்து புதிதாக சிறுநீர்ப்பை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்