என்ன ஆனது சூர்யாவின் ‘புற நானூறு’… சமீபத்தில் சுதா கொங்கராவோடு நடந்த சந்திப்பு!

vinoth
சனி, 4 மே 2024 (07:43 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.   இந்த படத்துக்குப் பிறகு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இருந்த நிலையில் தற்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு தகவலோ அந்த படம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக சொல்கிறது.

இதையடுத்து சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சூர்யாவின் புறநானூறு திரைப்படம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றி பேசுவதற்காக சுதா கொங்கரா மற்றும் சூர்யா ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில்  சுதா கொங்கரா துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்