ராஜு முருகன் இயக்கும் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு பதில் இவரா? லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (07:55 IST)
குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதையடுத்து அவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையடுத்து அவர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அந்த படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. ஜப்பான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் நடிப்பையும், ராஜு முருகனின் திரைக்கதையையும் மோசமாக விமர்சித்தனர்.

ஜப்பான் தோல்வியில் இருந்து வெளியே வந்த ராஜு முருகன் அடுத்த படத்துக்கு தயாரானார். அவரின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது. இந்த படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத்குமார் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தில் இருந்து பின்னர் எஸ் ஜே சூர்யா விலகினார். இப்போது அவருக்குப் பதிலாக சசிகுமார் அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்