கங்குவா படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு.. பாக்யராஜ் வேதனை!

vinoth
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (11:25 IST)
சூர்யா நடப்பில் உருவான  ‘கங்குவா’ திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. சூர்யாவின் மூன்று ஆண்டுகால உழைப்பு வீணாக்கப்பட்டுள்ளது என அவரின் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சூர்யா கடைசியாக திரையரங்குகளில் ஒரு வணிக ரீதியான வெற்றிப்படம் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது எனப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கம் என்றால் படத்தின் மோசமான உருவாக்கத்தால் கடுப்பான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படத்தைக் கடுமையாக கேலி செய்தனர். சூர்யா, சிவா மற்றும் ஞானவேல் ராஜா ஆகிய மூவரையும் பல விதங்களில் கேலி செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முடிந்த சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் “கங்குவா படத்தைப் பார்க்க நான் தியேட்டருக்கு சென்றேன். படத்தில் ஒரு சில குறைகளைத் தவிர நன்றாகதான் இருந்தது. அளவற்ற உழைப்பைக் கொட்டியுள்ளார்கள். குறைகளை விமர்சிக்கலாம். ஆனால் மக்கள் அந்த படத்தைப் பார்க்கவே கூடாது என்ற அளவுக்கு கட்டம் கட்டி விமர்சித்தது தவறான விஷயம். நம் சினிமாவை நாமே அழிக்கக் கூடாது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்