சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக, இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து, லப்பர் பந்து படத்தில் நடித்த ஸ்வாசிகா மற்றும் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகிய இருவரும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது அதே கண்கள், தீரா காதல், கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்த சுவேதா இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும், யோகி பாபுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சற்றுமுன் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில், நட்டி இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவுடன் கங்குவா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், தற்போது மீண்டும் சூர்யா படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.