லகான் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி!

vinoth

செவ்வாய், 15 ஜூலை 2025 (13:46 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள்.

இந்த ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகிவிட்டார் ரிஷப் ஷெட்டி. இதையடுத்து அவர் காந்தாரா இரண்டாம் பாகத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு அகண்ட இந்தியா படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘லகான்’ மற்றும் ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஷுடோஷ் காவரிகர் இயக்கவுள்ளார்.

இது விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டிய படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 83 உள்ளிட்ட பாலிவுட் படங்களைத் தயாரித்த வைஃப்ரி மீடியா நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்