‘ராஜாசாப் படத்தின் பாடல்களை எல்லாம் அழித்துவிட்டேன்’… இசையமைப்பாளர் தமன் தகவல்!

vinoth
புதன், 19 மார்ச் 2025 (07:40 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு  கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்த நிலையில் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகாது என சொல்லப்படுகிறது.

படத்தில் இன்னும் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். ஆனால் பிரபாஸ் தற்போது வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த காட்சிகள் எப்போது படமாக்கப்படும் என்றே தெரியவில்லையாம். இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமன் இந்த படத்துக்காக முன்பே உருவாக்கிய பாடல்கள் எல்லாம் இப்போது பழையதாகி விட்டதால் அவற்றை அழித்துவிட்டு புதிய பாடல்களை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்