ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மாவுடன் கைகோர்க்கும் பிரபாஸ்!

vinoth

சனி, 15 மார்ச் 2025 (10:32 IST)
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான 'ஹனுமான்' திரைப்படம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டியது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. இந்த படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது.

அதையடுத்து அதன் இரண்டாம் பாகமான ஜெய் ஹனுமான் படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் பிரசாந்த் வர்மாவின் அடுத்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை கேஜிஎஃப் மற்றும் சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபாச் தற்போது ராஜாசாப் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அவர் கைவசம் சலார் 2 மற்றும் கல்கி 2 ஆகிய படங்களும் உள்ளன. இதனால் பிரசாந்த் வர்மாவுடனான படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்