சல்மான் கான் நிராகரித்த கதையில் விஜய் சேதுபதி!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:40 IST)
நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு இப்போது மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் 30 நாட்களில் இந்த படத்தை முடிக்கவுள்ளார் இயக்குனர். 90 நிமிடம் ஓடக்கூடிய த்ரில்லர் படமாக இதை உருவாக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு இண்டர்வெல்லே கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதையை சல்மான் கானை மனதில் வைத்தே இயக்குனர் எழுதியுள்ளார். சல்மான் கானுக்கும் கதை பிடித்துள்ளது. ஆனால் தனது மாஸ் ரசிகர்களுக்கு இந்த படம் சரியாக இருக்காது என முடிவு செய்து அதை மறுத்து விட்டாராம். அதன் பின்னரே விஜய் சேதுபதியை தேர்வு செய்துள்ளார் ஸ்ரீராம் ராகவன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்