சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் பெரிய பில்டப்புகளுக்கு மத்தியில் ரிலிஸாகி படுதோல்விப் படமானது. அது மட்டுமில்லாமல் பெரிய அளவில் கேலி செய்யப்பட்ட படமாகவும் அமைந்தது. இந்த படம் மொத்தமாக திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது.
இந்த படம் பற்றிய கேலிகள் ஓரளவு மட்டுப்பட்ட போது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்த படத்தை அனுப்பி மீண்டும் கேலிகள் உருவாகக் காரணமாக அமைந்தது தயாரிப்பு நிறுவனம். தயாரிப்பாளர் தனிப்பட்ட முறையில் படத்தைப் பணம் செலவு செய்து ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பியிருந்தார். ஆனால் இப்போது இறுதிப் பட்டியலில் கங்குவா படம் இடம்பெறவில்லை.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் இருந்து எந்தவொரு திரைப்படமும் இறுதிப்பட்டியலில் இல்லை. ஆனால் இந்தியாவில் தயாரான அனுஜா என்ற குறும்படம், சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்பட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த படம் இரு சிறுமியரின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. இதை ஆடம் ஜே க்ரேவ்ஸ் எழுதி இயக்கியுள்ளார்.