பிரபல படத்தின் டீசரை லீக் செய்த ஹேக்கர்ஸ்! – தயாரிப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை!

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:50 IST)
தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்த பிரபல படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு உள்ளிட்டவர்களின் படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் “புஷ்பா”, மகேஷ்பாபு நடித்து வரும் “சர்காரு வாரி பாட்டா” படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் சர்காரு வாரி பாட்டா டீசர் பட நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனம் டீசரை வெளியிட சில மணி நேரங்கள் முன்னதாக ஹேக்கர்கள் சிலரால் டீசர் சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பட நிறுவனம் தொடர்ந்து தங்கள் படங்களின் பாடல்கள், டீசர்களை மர்ம கும்பல் திருட்டுத்தனமாய் இணையத்தில் பதிவேற்றுவதாகவும், இது குறித்து சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரசிகர்கள் இதுபோன்று திருட்டுத்தனமாக வெளியாகும் படங்களை பார்த்து குற்றம் செய்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்