மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

vinoth

வெள்ளி, 24 ஜனவரி 2025 (07:35 IST)
தமிழ் சினிமாவில் பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் அவர் செய்யும் சில கிறுக்குத் தனங்கள்தான் அவர் மேல் விமர்சனங்கள் எழ காரணமாக அமைகின்றன. சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். இதை அந்த மேடையில் இருந்த வெற்றிமாறன், ரஞ்சித் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் யாருமே கண்டிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது மிஷ்கினால் திரையுலகில் அறிமுகப்படுத்த இளம் இசையமைப்பாளர் அரோல் கரோலி மிஷ்கினின் இந்த பேச்சை கண்டித்துள்ளார். அவருடைய முகநூல் பதிவில் “இனிமேல் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு மற்றும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் கொண்டுவந்து கலை மற்றும் கலைஞர்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்கவேண்டும். சிலர் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வயிற்றுப் போக்கு போல வாய் வார்த்தைகளை வெளியேற்றுவதையாவது தடுத்து நிறுத்த வேண்டும்.” எனக் கண்டித்துள்ளார். முன்னதாக நடிகர் அருள்தாஸும் மிஷ்கினின் பேச்சைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்