இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலை: ராகவா லாரன்ஸ் பிரதிஷ்டை

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (10:21 IST)
இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலையை பிரதிஷ்டை செய்திருப்பதாக நடிகர்  ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

 
ராகவா லாரன்ஸ் நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். நடிகர் என்ற அந்தஸ்தை தாண்டி இவர் நல்ல மனிதர். ஆம், குழந்தைகளுக்கு உதவுவது, திருநங்கைகளை முன்நிறுத்தி தன் படங்களில் மரியாதையுடன் நடத்துவது என  சமூகத்தில் நல்ல பெயர் சம்பாதித்திருக்கும் லாரன்ஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டடுகிறார்.
 
இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக 15 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ராகவேந்திரா சாமியின் பளிங்கு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தனது மிகப்பெரிய கனவு. தற்போது அது நனவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்