ராகவா லாரன்ஸ் படத்தில் ’ரீமேக் ’பாடல்..ரசிகர்கள் மகிழ்ச்சி

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (17:44 IST)
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு கிளாஸிக் பாடலை ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் காஞ்சனா -3.

இதையடுத்து தற்போது அவர் ருத்ரன், துர்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களைத் தயாரித்த  ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி வருகிறார். 

இப்படத்தின் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் கடந்த 1962 ஆம் ஆண்டு வெளியான வீரத் திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் என்ற பாடலை ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்