சமுக வலைதளங்களில் வைரலாகும் தானா சேர்ந்த கூட்டம் டீசர்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (12:26 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். ஏற்கனவே இப்படத்தில் வரும் சொடக்கு பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இப்படத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த   படத்தை  தயாரித்துள்ளது.
 
ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 'நானும் ரவுடி தான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர்  விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே 'சொடக்கு மேல சொடக்கு போடுது' எனும் பாடல் வெளியாகி ஹிட்டான நிலையில், படத்தின்  டீசர் நேற்று மாலை வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்