மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் எஸ் ஜே சூர்யா… எந்த படத்தில் தெரியுமா?

vinoth
வெள்ளி, 5 ஜூலை 2024 (07:32 IST)
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை சொன்னார். ஆனால் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காத சூழலால் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடனே மீண்டும் இணைகிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க, வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனோடு டான் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்