ரூ.100 கோடி வசூலை நெருங்கிவிட்டதா சிவகார்த்திகேயனின் ‘டான்’?

Webdunia
திங்கள், 23 மே 2022 (19:14 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில் இந்தப் படம் ரூபாய் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது
 
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் இந்த படம் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக கூறப்பட்டது
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை எட்டி விடும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் டான் படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சிவகார்த்திகேயன் காட்டில் மழை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்