ரூ.10 குறைந்த தக்காளி விலை - மேலும் குறைய வாய்ப்பு!

திங்கள், 23 மே 2022 (09:40 IST)
இன்று கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை ஆகி வருகிறது. 

 
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
 
இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.10 விற்று வந்த தக்காளில் வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
ஆனால் இன்று கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 குறைந்து ரூ. 90க்கு விற்பனை ஆகி வருகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.79-க்கு விற்பனையாகுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்