நான் இப்போ காட்டுப் பசியில இருக்கேன்..! – சிம்புவின் அதிரடி பேச்சு!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:47 IST)
வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்து நடிக்க போகும் படங்கள் குறித்து நடிகர் சிம்பு பேசியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. நேற்று வெளியான இந்த படம் பரவலாக நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. முக்கியமாக இந்த படத்தின் சிம்புவின் வித்தியாசமான நடிப்பு பலராலும் புகழப்பட்டு வருகிறது.

ALSO READ: சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம்: டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா?

இந்நிலையில் பேசிய சிம்பு “நான் தற்போது காட்டுப் பசியில் இருக்கிறேன். அந்த பசியை தணிக்கும் விதமான கதைகள் எனக்கு கிடைக்கவில்லை. இதேபோன்ற ஒரு மனநிலை முன்பு இருந்தபோது மன்மதன் படன் செய்தேன். ஒருவேளை தற்போது நானே ஒரு படத்தை இயக்க வேண்டியிருக்கலாம். அல்லது அதுபோல ஒரு கதையை நான் தேட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சிம்பு மீண்டும் படம் இயக்குவாரா என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்த நிலையில் இந்த பதில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்