ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இப்படத்தில் . துல்கர் சல்மானுடன் இணைந்து மிருனாள் தாகுர் , ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்தனர், இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் கதா நாயகி மிருணாள் தாகூர், தன் டிவிட்டர் பக்கத்தில், ஒவ்வொருமுறை நான் டிவிட்டர் பக்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் சீதாராமம் படம் டிரெண்டிங்கில் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, இப்படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து, தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.