பிரபல தொலைக்காட்சி நடிகையின் அந்தரங்க விடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து கடுமையான பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்த வீடியோவை வெளியிட்டது ஆண்கள்தான், அதைப் பகிர்ந்தும் பரப்பியதும் அவர்கள் தான். அதே ஆண்கள்தான் லஞ்சம் கொடுப்பது தவறு, லஞ்சம் வாங்குவது குற்றம் என பேசுகிறார்கள். ஆனால், லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதையும், பெண்கள் சமரசம் செய்ய மறுப்பதால் வேலைகளை இழக்க நேரிடுகிறது என்பதையும் அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், பணிபுரியும் பெண்ணிடம் பாலியல் ஆதாயம் கோரிய அந்த அருவருப்பான மனிதனை பற்றி யாரும் பேசுவதில்லை.
இப்படி நடப்பதோடு, இப்படிப்பட்ட ஆண்கள் தொடர்ந்து மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், ஒரு பெண் சமூகம் முன்பு தன்னை தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். அந்த ஆண்களுக்கு எதை வேண்டுமானாலும் பெறுவதற்கான தைரியமும் வசதியும் இருக்கிறது, ஆனால் உண்மையான திறமை இல்லை. இவர்கள் விரும்பினால், வெளிப்படையாக விபச்சாரத்தின் வழியாகவே பணம் சம்பாதிக்கலாம். இந்நாட்டில் அதற்குப் போதுமான சந்தை இருக்கிறது!
இங்கு பெண்களும் சிறுமிகளும் கடத்தப்பட்டு வியாபார பொருளாக மாறுகிறார்கள். அவர்கள் சத்தமின்றி கொல்லப்படுகிறார்கள். மரங்களில் தொங்கவிடப்படுகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நடந்த அந்த கொடூர சம்பவத்தை நினைவில் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட மனப்போக்குள்ள ஆண்கள் கலை, ஊடகம், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற துறைகளில் இடம் பிடிக்கக் கூடாது. இதனால், கலையை குழந்தைகளுக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
பெண்களை தவறாக நடத்தியவர்களும், அவர்களை அடிமையாக்க நினைப்பவர்களும் தங்கள் குடும்பத்தில் எப்படித் தங்களை நடத்திக்கொள்கிறார்கள்? அவர்கள் மனைவியிடம், தாயிடம், சகோதரியிடம், மகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்? இவர்கள் துணிவில்லாத, பயனற்ற ஆண்கள். அவர்களை நினைத்து வருந்துகிறேன்.
அந்த வீடியோவை வெளியிட்ட ஆண்கள் யார்? அதை பரப்பியவர்கள் யார்? ஒரு நபர் படம் எடுத்தாலும், அதைப் பகிர்வதற்கு பலரும் தயாராக இருக்கிறார்களா? சரி, பெண்கள் உரிமை குறித்து பேசும் முன்னேறிய நாடாக இருந்தும், இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. இதுபோன்ற எல்லா நரக அரக்கர்களும் அழிந்து போக வேண்டும். நாசமாய்ப்போங்கள்! உங்களை இப்படி வளர்த்தவர்களோடு சேர்ந்து முழுதாக அழிந்து போங்கள்!”
பாடகி சின்மயி கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.