யுவன் கச்சேரிக்காக மலேசியா பறந்த சிம்பு!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (10:01 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் சிம்புவின் 50 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து சிம்பு நடிக்கும் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க, கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி இரண்டு படங்கள் அடுத்தடுத்து வரிசையில் இருந்தாலும் சிம்பு இப்போது லண்டன் மற்றும் மலேசியா என நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இப்போது யுவன் ஷங்கர் ராஜாவின் மலேசியா கான்செர்ட்க்காக சிம்பு தன் குடும்பத்தினருடன் மலேசியாவில் முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்