தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தனது உடல்நிலை சவால்களையும் மீறி திரையுலகில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த சிட்டாடல் என்ற வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று மதியம் திடீரென காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் பெரும் வருத்தத்தில் உள்ளனர். அவருக்கு திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும், சமூக வலைதளங்களில் அவரது ஆத்மா சாந்தி அடைய இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நடிகை சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் "இனி எப்போது எனது தந்தையை பார்ப்பேன்" என்று சோகமாக பதிவு செய்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.