முன்னதாக ஐசரி கணேஷிடம் தொடர்ந்து 2 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்தார் சிம்பு. அதன்படி ஒரு படத்தில் மட்டுமே நடித்து முடித்து கொடுத்துள்ளார். அடுத்த படத்தில் நடிப்பதற்குள் இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க சென்றுவிட்டார். அதனால் தங்கள் கம்பெனிக்கு முடித்துக் கொடுக்காமல் வேறு கம்பெனி படத்தில் நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தைக் கொடுத்திருந்தார்.
ஆனால் இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஐசரி கணேஷ் விட்டுக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் சிம்பு கமல்ஹாசன் நிறுவன படத்தை முடித்துவிட்டு பின்னர் ஐசரி கணேஷ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. அந்த படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஜெயம் ரவி இயக்கிய அடங்கமறு படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.