25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவைத் தொடங்கிய ராம்சரணின் ‘கேம்சேஞ்சர்’ படக்குழு!

vinoth
திங்கள், 16 டிசம்பர் 2024 (09:43 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதையடுத்து படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப் போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ரிலீஸுக்கு 25 நாட்களுக்கு முன்பாகவே தற்போது வெளிநாடுகளில் படத்துக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்